பக்கங்கள்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும் !


புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....
நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை
என்று பார்க்கச்சொல்வீர்கள்.
அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் வேகம் குறைந்ததாக ( Slow ) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சொப்ற்வெயார்களால் ( Automatic Running Programes ) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள்   Start  பட்டனை அழுத்தி search programs and files என்பதில் ரைப் செய்து



அதில்  msconfig  என்று டைப் செய்து என்ரர் (Enter)அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு (Wndow) ஓப்பன் ஆகும் 



அதில்  Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து  Start > Control Panel > Add or Remove Programs  சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை ( Software ) நீக்கிவிடலாம்.


அடுத்து  My Computer > C Drive  சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து   Properties    தேர்ந்தெடுத்து   Disk clean up  என்ற இடத்தை கிளிக் செய்து



கிளிக் செய்து வரும் விண்டோவில் அதில் உள்ள அனைத்தையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.


அடுத்து  Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter   என்ற பகுதிக்குச் சென்று  Defragment   என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.


2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல்    Error Display என்று அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.

இந்த பிரச்சனை தட்டை (  Error Display ) எப்படி போக வைப்பது.

Start > All Programs > Accessories > System Tools > System Resotre என்பதை கிளிக் செய்து

உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு (window) ஓப்பன் ஆகும்.



அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து   Next > Next  அழுத்தி   Finish  செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும்  (Restart ). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை தட்டு ( Error Display ) மறுபடியும் வராது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக