பக்கங்கள்

சனி, 18 ஆகஸ்ட், 2012

விண்டோஸ் 7 ற்கு கடவுச்சொல் மறந்து போனால் எப்படி மாற்றுவது


கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை,விண்டோஸ் இயங்குதளத்தின்  Admin  கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணணியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர்
கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7  DVD  தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் 7 Bootable DVD  மூலமாக குறிப்பிட்ட கணணியை தொடங்குங்கள்.  Install  திரையில்   Repair your Computer  லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும்  Options  திரையில்  Command Prompt  ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும்  Command Prompt  திரையில் கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

copy c:windowssystem32sethc.exe c:

இப்பொழுது  Sticky Keys  கோப்பானது  C: இல் கொப்பி செய்யப்படும். அடுத்ததாக  cmd.exe  கோப்பை  Sticky Keys  இற்கு பதிலாக  Replace  செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

copy c:windowssystem32cmd.exe c:windowssystem32sethc.exe


Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை   Sticky keys  கோப்பை இயக்கும் பொழுது அதற்கு பதிலாக  Command Prompt  திறக்கும்.

இப்பொழுது கணணியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள்.   Login   திரை தோன்றும் பொழுது  Shift Key  ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல  Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக  Command prompt  திறக்கும்)

Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.(பயனர்பெயர்(xxx) மற்றும் கடவுச்சொல்லை( new password ) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)

net user xxx newpassword

அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி   Sticky Keys   கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து  Command Prompt  சென்றுஇ கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.

c:sethc.exe c:windowssystem32sethc.exe.

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து கொப்பி செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது கடவுச்சொல் மாற்றப்பட்டு விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக